''கார்த்தியை காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை'' என்றார் தமன்னா. ‘பையா’ படத்தில் கார்...
''கார்த்தியை காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை'' என்றார் தமன்னா. ‘பையா’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார் தமன்னா. இதையடுத்து இப்போது மீண்டும் கார்த்தியுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாகவும் தன்னுடன் நடிக்க தமன்னா பெயரை கார்த்தி சிபாரிசு செய்வதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமன்னா அளித்த சிறப்பு பேட்டி:
என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாக பழகுவேன். கார்த்தியுடனும் அப்படித்தான் பழகினேன். சூர்யாவுடன் ‘அயன்’ படத்தில் நடித்தபோது கார்த்தியை பற்றி நிறைய சொல்வார். ‘என்னுடன் நடிப்பதைவிட கார்த்தியுடன் நடிக்கும்போது நேரம் போவதே உங்களுக்கு தெரியாது. காரணம், கார்த்தி கலகலப்பாக பேசக்கூடியவன்’ என்பார். அவர் சொன்னது உண்மைதான் என்பதை ஷூட்டிங் ஸ்பாட்டில் தெரிந்துகொண்டேன்.
ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் நட்பாக பேசிக்கொள்வது தவறா? எங்களை பற்றி நிறைய தகவல்கள் வருகிறது. அதில் எதுவும் உண்மை இல்லை. கார்த்தியுடன் மீண்டும் இணைந்து நடிப்பது பற்றியும் கேட்கிறார்கள். இதற்கு முன் ஒரே ஹீரோ, ஹீரோயின் பல படங்களில் சேர்ந்து நடித்ததே இல்லையா? அப்படி பலர் இருக்கிறார்கள். அதனால் இதை பெரிதுபடுத்த தேவையில்லை.
வெளியிடங்களுக்கு எங்கு சென்றாலும் அப்பா, அம்மாவுடன்தான் செல்வேன். எந்த வெளியிடத்திலும் என¢னுடன் நடிக்கும் ஹீரோக்களையோ, பிற நடிகர்களையோ நான் சந்தித்ததே கிடையாது. அப்படி இருக்கும்போது இது போன்ற காதல் செய்திகளை கேட்டு சிரிப்புதான் வருகிறது. இப்போது கார்த¢தியுடன் நடிக்கும் படம் தவிர, தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். தெலுங்கில் இரு படங்களில் நடிக்கிறேன். இப்போதைக்கு சினிமாவில் கவனம் செலுத்துவது மட்டுமே எனது முதல் வேலை. இவ்வாறு தமன்னா கூறினார்.
Comments
Post a Comment