கேடி படத்தில் நடித்தார் இலியானா. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் ஜோடியாக நடிக்க தமிழுக்கு வந்துள்ளார். இவர் விளம்பர படங்களிலும் கவன...
கேடி படத்தில் நடித்தார் இலியானா. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் ஜோடியாக நடிக்க தமிழுக்கு வந்துள்ளார். இவர் விளம்பர படங்களிலும் கவனம் செலுத்துகிறார்.இது பற்றி இலியானா கூறியதாவது:சினிமாவில் நடிக்கும்போது விளம்பர படங்களில் நடிக்கக்கூடாது என சிலர் சொல்கிறார்கள். அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது அதை பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை.
சினிமாவில் நடித்துக்கொண்டே, விளம்பர படங்களில் நடிப்பதில் என்ன தவறு? ரசிகர்களிடம் மவுசு குறைந்து, மார்க்கெட் போய்விட்டால் யாரும் நம்மை தேடப் போவதில்லை. மற்றவர்களை பற்றி நான் குறிப்பிடவில்லை. என்னைப் பொறுத்தவரை, சில கொள்கைகளை கடைபிடிக்கிறேன். தரமான பொருள்களுக்கான விளம்பரத்தில் மட்டுமே நான் நடிக்க சம்மதிக்கிறேன்.
Comments
Post a Comment