எனக்கு முக்கியத்துவமுள்ள வேடம் இருந்தால் மட்டுமே இரண்டாவது ஹீரோயினாக நடிப்பேன் என கூறி வந்தார் பிரியாமணி. ஆனால் இந்த பாலிசியிலிருந்து மாறி...
எனக்கு முக்கியத்துவமுள்ள வேடம் இருந்தால் மட்டுமே இரண்டாவது ஹீரோயினாக நடிப்பேன் என கூறி வந்தார் பிரியாமணி. ஆனால் இந்த பாலிசியிலிருந்து மாறி, தெலுங்கில் ஒரு படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறாராம். அந்த படத்தில் முதல் ஹீரோயினாக நடிப்பது அனுஷ்கா. அவருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும் என தெரிந்தும் பிரியாமணி இதில் நடிப்பதற்கு காரணம், நாகார்ஜுனா என்கிறது அப்பட வட்டாரம்.வீரு பொட்லா இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா ஹீரோ. அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.
படத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேசப்பட்டது. இரண்டாவது ஹீரோயின் என்பதால் அவர் தயங்கினாராம். பின் நாகார்ஜுனாவே அவரிடம் பேசியிருக்கிறார். நாகார்ஜுனாவுடன் நடிப்பதென்றால் நடிகைகள் உடனே கால்ஷீட் தருவார்கள். அவரே கேட்டதால் இதில் நடிக்க பிரியாமணி சம்மதித்தார் என பட யூனிட்டிலுள்ள ஒருவர் தெரிவித்தார். குமார் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நாகார்ஜுனாவின் உறவினர் நடிக்கிறார். அதில் ஹீரோயினாக நடிக்க பிரியாமணியை சிபாரிசு செய்துள்ளாராம் நாகார்ஜுனா.
Comments
Post a Comment