பிரகாஷ் ராஜ், லலிதா குமாரிக்கு விவாகரத்து நடந்தது. இதையடுத்து தனது காதலியும் நடன இயக்குனருமான போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் திருமணம் செய்துகொள்...
பிரகாஷ் ராஜ், லலிதா குமாரிக்கு விவாகரத்து நடந்தது. இதையடுத்து தனது காதலியும் நடன இயக்குனருமான போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இவர்கள் திருமணம் இம்மாதம் இறுதியில் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். ஆகஸ்ட் 24ம் தேதி மும்பையில் இவர்கள் திருமணம் நடக்கிறது என இவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர். பிரகாஷ்ராஜ் ஒரே நேரத்தில் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். போனி வர்மாவும் தமிழ், இந்தி படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறார். இம்மாதம் முழுவதும் இவர்கள் பிசி என்பதால் கல்யாண தேதி தள்ளிப்போயுள்ளது என கூறப்படுகிறது.
Comments
Post a Comment