ஐதராபாத் : 'கிழக்கே போகும் ரயில்', 'நிறம் மாறாத பூக்கள்', 'கல்லுக்குள் ஈரம்' உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ச...
ஐதராபாத் : 'கிழக்கே போகும் ரயில்', 'நிறம் மாறாத பூக்கள்', 'கல்லுக்குள் ஈரம்' உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் சுதாகர் (54). இபோது தெலுங்கு படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்தி, உட்பட பல்வேறு மொழிகளில் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ள சுதாகர், ஐதராபாத்தில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். உடல் நலம் சரியில்லாமல் கடந்த 29ம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். சுதாகர், சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு பயிற்சி பெற்றவர். இவரது அறை நண்பர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. ராதிகாவும் சுதாகரும் தமிழில் 18 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment