Entertainment
›
Cine News
›
நடிகர் விஜய் படம் விவகாரம் :மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகர் விஜய் படம் விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜ...
நடிகர் விஜய் படம் விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜானி தாமஸ், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
நான், கடந்த 2008ம் ஆண்டு 'பாடிகார்டு' என்ற மலையாள படத்தை தயாரித்தேன். படத்தை இயக்க கே.ஐ.சித்திக் என்பவரை நியமித்தேன். இவருக்கு ரூ.40 லட்சம் சம்பளம் ஒப்பந்தம் போடப்பட்டது. படம் முடிந்து கேரளாவில் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடியது. இயக்குநருடன் ஒப்பந்தம் போட்டபோது, 45 நாட்களில் படத்தை முடிப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால், 120 நாட்களில்தான் படத்தை இயக்குநர் முடித்துக் கொடுத்தார். இதனால், எனக்கு கூடுதல் செலவானது. தற்போது எனக்கு தெரியாமல் இந்த கதையை தமிழில் 'காவல்காரன்' என்ற பெயரில் நடிகர் விஜய்யை வைத்து சித்திக் தயாரித்து வருகிறார். என்னுடைய ஒப்புதல் இல்லாமல் என் படத்தை தமிழில் தயாரிக்க அவருக்கு உரிமை இல்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை 11வது மாஜிஸ்திரேட் விசாரித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வக்கீல் சிவராமன் ஆஜராகி வாதாடினார்.

Comments
Post a Comment