ஹிந்தியில் அமீர்கான் நடித்த ’3 இடியட்ஸ்’ படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009 ஆண்டு இறுதியில...
ஹிந்தியில் அமீர்கான் நடித்த ’3 இடியட்ஸ்’ படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009 ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இப்படத்தில் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை “ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்” நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை டைரக்ட் (ரீமேக்) செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எந்திரன் படத்தை சமீபத்தில் முடித்த ஷங்கர் ’3 இடியட்ஸ்’ படத்தின் கதை விவாதத்தில் உள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். தெலுங்கில் மக«ஷ் பாபு (அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில்) நடிக்கிறார். விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் மற்ற இரண்டு நடிகர்கள் யார் என்பது இன்னும் இழுபறியாக உள்ளது. ஆனால் மற்ற இரு கதாபாத்திரத்தில் சிம்பு மற்றும் மாதவன் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. பேராசிரியர் வேடத்தில் ‘சத்யாராஜ்’ நடிக்கலாம் என தெரிகிறது. மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment