அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம், 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சித்த...
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம், 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சித்தார்த். பாடல்கள்: நா.முத்துக்குமார், விவேகா. கதை, சு.வெங்கடேசன். வசந்தபாலன் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. சிவா வரவேற்றார். ராம.நாராயணன், சிவகுமார், ஷங்கர், மதன், எஸ்.ஏ.சந்திரசேகரன், வி.சி.குகநாதன், சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், நா.முத்துக்குமார், திருச்சி சிவா எம்.பி., எடிட்டர் மோகன், வெங்கட் பிரபு வாழ்த்தி பேசினர். படம் பற்றி வசந்தபாலன் கூறியதாவது:
18&ம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதை. வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' கதையின் சில பாகங்கள் படமாக உருவாகிறது. இப்படத்துக்காக, ஆதி, பசுபதி, தன்ஷிகா உட்பட பலர் தீவிர உடற்பயிற்சி செய்து வருகின்றனர். ஆகஸ்டில் ஷூட்டிங் தொடங்குகிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக இது உருவாகிறது. பின்னணி பாடகர், கார்த்திக், இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அரவான் என்றால் யார்? அவன் எப்படிப்பட்டவன் என்ற பாடலை கார்த்திக் பாடி காட்டினார். அப்போதே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக அவர் வருவார் என்பதை உணர முடிந்தது. எனது குரு ஷங்கர். 'அங்காடித் தெரு' பார்த்துவிட்டு, 3 மணி நேரம் அங்குலம் அங்குலமாக பாராட்டினார். என் திரையுலக வளர்ச்சியை தாய்ப்பாசம் பொங்கப் பாராட்டி, சீராட்டி வருபவர் அவர்தான். அவருக்கு எப்போதும் நன்றி உடையவனாக இருப்பேன்.இவ்வாறு வசந்தபாலன் பேசினார்.
Comments
Post a Comment