Entertainment
›
Cine News
›
இலங்கை சென்ற அசினுக்கு தடை : 11ம் தேதிக்கு பிறகு திரையுலக கூட்டமைப்பு முடிவு
தமிழ் சினிமா கூட்டமைப்பின் தடை மீறி இலங்கைக்கு ஷூட்டிங் சென்ற நடிகை அசின் அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுபற்றி கூறும்போது, ...
தமிழ் சினிமா கூட்டமைப்பின் தடை மீறி இலங்கைக்கு ஷூட்டிங் சென்ற நடிகை அசின் அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுபற்றி கூறும்போது, 'நான் அரசியல்வாதி இல்லை, கிரிக்கெட் வீரர்கள் போகும்போது ஷூட்டிங்கில் பங்கேற்க நான் செல்வதில் தவறு இல்லை' என்றார். அவரது பதில் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இலங்கை தமிழர் விவகாரத்தை ஒட்டி சமீபத்தில் இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தமிழ் திரையுலகம் புறக்கணித்தது. தமிழ் படம் திரையிடக்கூடாது, நடிகர், நடிகைகள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்று திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. அதை ஏற்று தமிழ் படங்கள் திரையிடப்படவில்லை. நடிகர், நடிகைகளும் விழாவை புறக்கணித்தனர்.
இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற 'ரெடி' படம் இந்தியில் தயாராகிறது. இதில் சல்மான்கான் ஜோடியாக அசின் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது. அதில் அசின் பங்கேற்று நடித்து வருகிறார்.
அசின் அளித்துள்ள இந்த பேட்டி தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறியதாவது: தமிழ் திரையுலகினர் இலங்கை செல்லக்கூடாது என்று தடை விதித்திருப்பது உண்மைதான். இந்த முடிவை தனிப்பட்ட முறையில் யாரும் எடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் சேர்ந்து எடுத்த முடிவு. அரசியல்வாதி இல்லை, விளையாட்டு வீராங்கனை இல்லை, நான் செல்வதில் தப்பில்லை என்று அசின் தெரிவித்துள்ள கருத்து, அங்கு இந்தி பட ஷூட்டிங்கில் இருப்பதுபோன்ற எல்லா விவரமும் எனக்கு தெரியவந்தது. வரும் 11ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடக்க உள்ளது. அதில் எல்லோரும் பிஸியாக இருப்பதால் இதுபற்றி ஆலோசிக்க நேரமில்லை. தேர்தல் முடிந்தவுடன் திரையுலக கூட்டமைப்பு கூடி அசினுக்கு தடை விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு ராதாரவி கூறினார்
Comments
Post a Comment