Vijay's negotiation talks with exhibitors | நடிகர் சங்கத்தில் பஞ்சாயத்து... 'இறங்கி வந்த' விஜய்!!

http://thatstamil.oneindia.in/img/2010/06/10-vettai200.jpg
தனது திரை வாழ்க்கையில் முதல் முறையாக, தனது பட நஷ்ட ஈடு சம்பந்தமான ஒரு பஞ்சாயத்தில் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார் வி்ஜய்.

பஞ்சாயத்து நடந்த இடம் நடிகர் சங்க வளாகம். செவ்வாய்க்கிழமை இரவு திடீரென இந்த பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஏற்பாட்டில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் விஜய். கூடவே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், சுறா பட தயாரிப்பாளர் சங்கிலி முருகனும் இருந்தார்கள்.

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்த விஜய், 'நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?' என்று நேரடியாகக் கேட்க, நஷ்ட ஈட்டின் அளவை பன்னீர் செல்வம் விளக்கினார்.

ஆனால் அவர் கேட்ட தொகையைக் கொடுப்பது சாத்தியமில்லை என்பதுபோல விஜய் பேச, விருட்டென்று எழுந்து போய்விட்டார்களாம் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்ததால், மேலும் இறங்கிவந்த விஜய், மீண்டும் அவர்களை அழைத்து பேசினாராம். இனியும் இந்தப் பிரச்சினையை வளர விடுவது சரியல்ல என்று சரத்தும் ராதாரவியும் விஜய்யிடம் கூறினார்களாம்.

இப்போது இருதரப்பும் ஒரு புதிய முடிவை எட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இன்னும் ஓரிரு தினங்களில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என்கிறது தியேட்டர்காரர்கள் தரப்பு.

பிரச்சினை தீர்ந்தால் சரி!

Comments

Most Recent