Top 5 - Chennai Box Office

http://beta.thehindu.com/multimedia/dynamic/00118/IN26_SINGAM_118955f.jpg 
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறபத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது.

5. காதலாகி
சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 3 லட்சம் வசூலித்துள்ளது. வார நாட்களில் படத்தின் வசூல் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளதால் அனைத்துத் தரப்பினருக்கும் இப்படம் நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.

4. கற்றது களவு
கிருஷ்ணா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கும் அவ்வளவாக வரவேற்பில்லை. முதல் மூன்று தினங்களில் இப்படம் 3.16 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. லேட் பிக்கப் என்ற கானல் நீரை நம்பியிருக்கிறது கற்றது களவு.

3. மாஞ்சா வேலு
ஆர்ப்பாட்டம், அட்டகாசத்துடன் வெளியான வேலுவுக்கும் ரசிகர்கள் பாராமுகத்தையே காட்டியுள்ளனர். சென்ற வார இறுதியில் இப்படம் 3.38 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் ஒரு வார சென்னை வசூல் 18 லட்சங்கள்.

2. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
சென்ற வார இறுதியில் 11.7 லட்சங்களை இந்த முரட்டு சிங்கம் வசூலித்துள்ளது. 3 வார முடிவில் இதன் மொத்த சென்னை வசூல் 1.23 கோடிகள். படத்தின் பிரமாண்டத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு.

1. சிங்கம்
முதலிடத்தில் சிங்கம். இந்த சிங்கத்தின் கர்ஜனை தமிழக திரையரங்கு அனைத்திலும் எதிரொலிக்கிறது. இதன் முதல் மூன்று நாள் சென்னை வசூல் 78 லட்சங்கள். நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிக‌ரித்து வருவதால் வசூல் சென்னையில் மட்டும் ஆறு கோடியை தாண்டும் என விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.

Comments

Most Recent