Entertainment
›
Cine News
›
Tamil TV actress commits suicide | டி.வி. நடிகை தற்கொலை விவகாரத்தில் புதுத்தகவல்!
Popular Tv actress Sasirekha was found hanging at a farm house at Injambakkam on the East Coast Road last night. There might be some myster...
Popular Tv actress Sasirekha was found hanging at a farm house at Injambakkam on the East Coast Road last night. There might be some mystery behind this death as Sasirekha’s death as her boy friend Shan, who had booked the room and stayed with her, was missing from the time of her death. According to the news sources, Sasirekha a Telugu Tv serial actress came to Tamilnadu for Movie chances in Tamil Industry. Sasirekha met Shan (Kumar) who’s a Dance Instrcutor from Tamil Movie Industry.
According to Police, while leaving the farm house at Injambakkam yesterday morning, Shan (Kumar) told the watchman that Sasirekha was sleeping. When this watchman went to the room with food to serve her, he was shocked to see Sasirekha hanging from the ceiling fan.
Neelangarai Police officials took control of Sasirekha’s body and sent it to post-mortem. The police also has launched a search operation to find Kumar, whose mobile is reportedly switched off.
சென்னை ஈஞ்சம்பாக்கம் கெஸ்ட் ஹனுசில் ஆந்திர "டிவி' நடிகை மர்மமான முறையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் அரசி கார்டன் என்ற பெயரில் தனியார் "கெஸ்ட் ஹவுஸ்' ஒன்று உள்ளது. அங்கு, நீச்சல்குளத்துடன் தனித்தனியாக எட்டு அறைகள் உள்ளன. பென்ஸ் ரெக்ரியேஷன் கிளப்பை சேர்ந்த உறுப்பினர்கள், அவர்கள் சிபாரிசு செய்பவர்கள் மட்டும், அங்கு தங்க அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 6ம்தேதி, மதியம் ஒரு இளம்ஜோடி ஸ்கூட்டியில் அங்கு சென்றது. கிளப்பின் உறுப்பினர், மதிஅருள்ராஜ் சிபாரிசு பேரில், அங்கு தங்க வந்ததாக அந்த ஜோடி கூறியது. பின், குமார் என்ற பெயரில் 1,300 ரூபாய் கொடுத்து, ஒரு நாள் தங்க ரூம் புக் செய்தனர். மறுநாள் மதியம் 2 மணிக்கு, கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் லியோவை சந்தித்த குமார், "நாங்கள் மேலும் ஒரு நாள் தங்குகிறோம். நான் பணம் எடுக்க ஏ.டி.எம்., செல்கிறேன். எனது மனைவி தூங்குகிறாள். அவர் விழித்ததும் உணவு கொடுங்கள்' எனக் கூறி, குமார் ஸ்கூட்டியில் புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில், குமாருடன் வந்த பெண் உணவு ஆர்டர் செய்து, அறையை சுத்தப்படுத்த ஆள் அனுப்பும் படி கூறினார். அதன் படி மணிகண்டன் என்ற ஊழியர், அந்த பெண்ணிற்கு உணவு கொடுத்து, அறையை சுத்தப்படுத்தி விட்டு வந்தார். பின், அந்த பெண் கதவை மூடிக் கொண்டார். நீண்டநேரமாகியும், குமார் திரும்பி வரவில்லை. அறையில் இருந்த பெண்ணும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த "கெஸ்ட் ஹவுஸ்' ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அந்த பெண், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துரைப்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி மேற்பார்வையில், நீலாங்கரை இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட அந்த பெண் "டிவி' சீரியல் நடிகை சசிரேகா(20) என்பது தெரியவந்தது. ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவரின் மனைவி வரலட்சுமி. இவர்களின் மகள் சசிரேகா. மகன் உபேந்திரா(18). இவர்கள், பிழைப்பு தேடி, நான்கு ஆண்டுகளுக்குமுன், சென்னை வந்து, வளசரவாக்கம், வியாசர் தெருவில் வசித்து வந்தனர். பாரீசில் உள்ள ஒரு மிளகாய் மண்டியில், சீனிவாசராவ் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். உபேந்திரா, பிளஸ் 2 படித்து வருகிறார். குடும்பத்தை காப்பாற்ற, சசிரேகா, ஆந்திர "டிவி' சீரியல்களில் நடித்து வந்தார். அவருக்கு தமிழ்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக கீழ்கட்டளை, ஈஸ்வரன் நகரை சேர்ந்த ஷா என்ற குமார்(25) என்பவரிடம் டான்ஸ் பயிற்சி பெற்றார். அவருடன் குரூப் டான்சும் ஆடி வந்தார். இரண்டு ஆண்டுகளாக, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சினிமாவில் நடிப்பதற்கு, வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்தபோது, சசிரேகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குமாரை தேடி, போலீசார் கீழ்கட்டளை விரைந்தனர். அங்கிருந்து குமார் தலைமறைவாகி விட்டார். போலீசார் தனிப்படைகள் அமைத்து குமாரை தேடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெற, தயாரிப்பாளர் ஒருவரை நாம் சந்திக்க வேண்டும் என, சசிரேகாவை ஈஞ்சம்பாக்கம் கெஸ்ட்ஹவுசிற்கு குமார் அழைத்து வந்தார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, குமாரின் நண்பர்களை படத் தயாரிப்பாளர் எனவும், "அவர்களையும் நீ திருப்திபடுத்த வேண்டும். அப்போது தான் சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைக்கும்' எனவும், சசிரேகாவிடம் குமார் வற்புறுத்தினார். சசிரேகா மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சசிரேகாவை தகாத வார்த்தைகளால் திட்டிய குமார் வெளியேறியதாகவும், இதன் காரணமாக, சசிரேகா தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
குமாரின் வீட்டை, தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது, அங்கு 50க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள், ஏராளமான ஆணுறைகள் காணப்பட்டன. அங்கிருந்த ஆபாச "சிடி'க்களும் பறிமுதல் செய்யப்பட்டன. துணை நடிகைகளுடன் அதிக தொடர்புள்ள குமார், தனது வளர்ச்சிக்காக விபசார தொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அதற்கான, வலுவான ஆதாரங்களும் போலீசாரிடம் சிக்கியது தெரியவருகிறது. பல இளம்பெண்களுக்கு நடனம் கற்றுத் தந்து, சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வழக்கில் குமார் சிக்கினால், பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
Comments
Post a Comment