Prabhu Deva apologise to Hansika! | ஹன்ஸிகாவிடம் மன்னிப்புக் கேட்ட பிரபு தேவா

http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=769427&g2_serialNumber=2
இயக்குநர் பிரபுதேவா கெட்ட வார்த்தையில் திட்டியதால் கோபித்துக் கொண்டு படப்பிடிப்புக்கே டிமிக்கி கொடுத்துள்ளார் 'இச்' படத்தில் நடிக்கும் ஹீரோயின் ஹன்ஸிகா.

கடைசியில் பிரபு தேவாவே மன்னிப்புக் கேட்ட பிறகுதான் இறங்கி வந்துள்ளார்.

'இச்' படத்துக்காக பாரிஸில் முகாமிட்டுள்ளனர் பிரபு தேவா, ஹீரோ ஜெயம் ரவி மற்றும் ஹீரோயின் ஹன்ஸிகா மோத்வானி. படப்பிடிப்பின்போது சொன்னதை கவனிக்காமல் ஹன்ஸிகா சொதப்ப, கோபத்தில் கெட்ட வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்துவிட்டாராம் இயக்குநர் பிரபு தேவா.

இதனால் கடுப்பாகிவிட்ட ஹன்ஸிகா, செட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டாராம்.

அடுத்த நாள் படப்பிடிப்பு துவங்கும் நேரமாகியும் ஹீரோயின் வராததால், யூனிட் ஆட்களை அனுப்பி கூப்பிட்டாராம் பிரபு தேவா. ஆனால் அப்படியும் அவர் வரும் வழியைக் காணோம். கடைசியில் பிரபுதேவாவே நேரில் போய் ஸாரி கேட்ட பிறகுதான் ஷூட்டிங்குக்குக் கிளம்பினாராம்.

அன்று முழுக்க அம்மணி சொதப்பியும், திட்டமுடியாமல் இயக்குநர் தவித்தது தனிக் கதை.

Comments

Post a Comment

Most Recent