Entertainment
›
Cine News
›
Namitha - Danush join in Twitter | ஹாய் மச்சான்ஸ்...ட்விட்டருக்கு வாங்க!-நமீதா
கோடம்பாக்கவாசிகளின் இப்போதைய புதிய பொழுதுபோக்கு ஃபேஸ்புக்கில் உலாவுவதும் ட்விட்டரில் குறுந்தகவல்களைப் பறிமாறிக் கொள்வதும்தான். கவர்ச்சி...
கோடம்பாக்கவாசிகளின் இப்போதைய புதிய பொழுதுபோக்கு ஃபேஸ்புக்கில் உலாவுவதும் ட்விட்டரில் குறுந்தகவல்களைப் பறிமாறிக் கொள்வதும்தான்.
கவர்ச்சிக் கட்டழகி நமீதாவும் இப்போது ட்விட்டரில் இணைந்துள்ளார். ஒரே நாளில் அவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.
அவரது முதல் ட்வீட் (ஐடி: inamitha) இப்படி அமைந்துள்ளது:
"ஹாய் மச்சான்ஸ்... லவ் யு ஆல். இது என்னுடைய தனிப்பட்ட ட்விட்டர் அக்கவுண்ட்.."
இத்துடன் மும்பையிலிருந்து அவர் ட்விட் செய்வது போன்ற படத்தையும் இணைத்துள்ளார்.
நடிகர்களில், லேட்டஸ்டாக ட்விட்டரில் இணைந்திருப்பவர் தனுஷ். இவர்களைத் தவிர, த்ரிஷா, ஜெனிலியா, மம்தா மற்றும் குத்து ரம்யா ஆகியோரும் ட்விட்டரில் செய்தி பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் ஏராளமான நட்சத்திரங்கள் தங்கள் எண்ணங்களை இடுகைகளாக தருகிறார்கள். அதே நேரம், நயன்தாரா, த்ரிஷா, ஷாலினி அஜீத் போன்றவர்களின் பெயர்களில் பொய்யான பக்கங்களை உருவாக்கி ஏமாற்றுவதும் தொடர்கிறது!
Comments
Post a Comment