நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... திரை படம் எடுத்த ரெண்டெழுத்து இயக்குனர், புது படம் பண்ணப்போறாரு. அதுக்கு பாய்ஸ் நடிகைகிட்ட...
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
திரை படம் எடுத்த ரெண்டெழுத்து இயக்குனர், புது படம் பண்ணப்போறாரு. அதுக்கு பாய்ஸ் நடிகைகிட்ட பேசினாராம்... பேசினாராம்... ஒரு கோடி தந்தா நடிக்கிறேன்னு நடிகை சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... டைரக்டர் அதிர்ச¢சியில இருக்கிறாராம்... இருக்கிறாராம்...
பின்கோடு படம் எடுத்தவரு அடுத்த படத்துக்காக, நிறைய சிடிக்களை பார்த்துட்டு இருக்கிறாரு. அது ஹாலிவுட் பட சிடி கிடையாது. எல்லாமே தமிழ் பட சிடியாம். அதுவும் முன்னணி ஹீரோக்களோட படங்களாம்... படங்களாம்... அந்த ஹீரோக்களை இமிடேட் பண்ற மாதிரி, அடுத்த படம் பண்ணப்போறாராம். அதுக்காக அவரோட யூனிட் தயாராகிட்டு இருக்காம்... இருக்காம்...
வானம்தாண்டுற படத்தை இந்திய¤ல பண்றதா சொன்னாரு ம¤ன்னல் இயக்குனரு. படம் ஆரம்பிக்கிறதுல சிக்கல் வந்திருக்காம்... வந்திருக்காம்... இயக்குனரோடு சேர்ந்து படம் தயாரிக்கிற கம்பெனி, பட செலவு
அதிகம்னு சொல்லி ஜகா வாங்க பாக்குதாம்...பாக்குதாம்...அதனால நிறுத்தி இருந்த அந்த பழைய த்ரில் படத்தை இயக்குனர் திரும்ப ஆரம்பிச்சிட்டாராம்... ஆரம்பிச்சிட்டாராம்...
Comments
Post a Comment