நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... சென் நடிகை தன்னோட பெயரோடு இங்கிலீசுல 'ஹெச்'சை புதுசா சேர்த்தாரு. அப்படி சேர்த்...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
சென் நடிகை தன்னோட பெயரோடு இங்கிலீசுல 'ஹெச்'சை புதுசா சேர்த்தாரு. அப்படி சேர்த்தும் நியூமராலஜி ஒர்க் ஆகலயாம்... ஆகலயாம்... புது படம் எதுவும் கிடைக்காததால அந்த ஹெச்சை தூக்கி வீசிட்டாராம்... வீசிட்டாராம்...
சாமியார் சர்ச்சையில சிக்கினாரு ர நடிகை. அவரோட பெயரோடு நாயரையும் சேர்த்த கேரள வரவு ஒருத்தரு, தமிழுக்கு வந்திருக்காரு... வந்திருக்காரு... அந்த கேரள நடிகையோட பெயரை கேட்டதும் அலறிய இயக்குனர், உடனே பெயரை மாத்திட்டாராம்... மாத்திட்டாராம்... மாலினிங்கிற பெயர்ல நாள், நேரத்தை சொல்ற படத்துல நடிகை நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்...
பழங்கால நாகரிக பெயரை கொண்ட படத்தை எடுக்கிறாரு பளார் இயக்குனர். தெலுங்கு நாக நடிகரோட மனைவி பெயர்கொண்டவரு இதுல ஹீரோயின். இந்த நடிகை ஏற்கனவே ஒரு படத்துல நடிச்சாரு. அது ரிலீசும் ஆயிடுச்சி. இப்போ திடீர்னு தன்னோட படத்துக்கு பெயரை மாத்தணும்னு பளார் சொல்றாராம்... சொல்றாராம்... 'இந்த பெயர்ல இன்னொரு படத்துலேயும் நடிக்கிறேன். அதனால இதை மாத்த முடியாதுÕன்னு நடிகை மறுக்கிறாராம்... மறுக்கிறாராம்... இதனால கடுப்பான இயக்குனரு, நடிகைக்கு புது பெயர் வச்சுதான் அழைக்கிறாராம்... அழைக்கிறாராம்...
பெயர் பிரச்னைகளா சொல்லிட்டு ஜக்கம்மா கிளம்பிட்டா. நாளைக்கு மீட் பண்ணுவோம்.
Comments
Post a Comment