நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... யோகியான படத்துக்கு பிறகு சான்ஸ் எதுவும் கிடைக்காததுல மது நடிகை ரொம்பவே அப்செட்டாம்.....
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
யோகியான படத்துக்கு பிறகு சான்ஸ் எதுவும் கிடைக்காததுல மது நடிகை ரொம்பவே அப்செட்டாம்... அப்செட்டாம்... கணவர்குல ஆலோசனைப்படி சென்னையில உறவுக்காரங்க வீட்டுல தங்கியிருந்து சான்ஸ் வேட்டையாடுறாராம்... வேட்டையாடுறாராம்... இன்னும் இளமையா இருக்கேன்னு காட்டிக்க, புது போட்டோ ஷூட் நடத்தினாராம். அதை தெரிஞ்ச இயக்குனருங்களுக்கு அனுப்பியிருக்கிறாராம்... இருக்கிறாராம்...
வெளிநாட்டுல கலை நிகழ்ச்சிக்கு போயிட்டு, திரும்பியிருக்கிறாரு ஷம்முவான நடிகை. அவரோட புது மேனேஜரை பார்த்த கோடம்பாக்க ஆட்கள், கூடிப் பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்... காரணம், அவரு கொஞ்ச நாளைக்கு முன்னாடி புழலுக்கு போயிட்டு வந்தவராம்... வந்தவராம்... அதற்கான ரகசியத்தை பத்திதான் பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...
மகனை வைத்து படம் இயக்குற மாஜி ஜெய நடிகையின் சிக்கன நடவடிக்கைய பார்த்து யூனிட்டே கலங்கி கிடக்குதாம்... கிடக்குதாம்... எல்லா காட்சியும் ஒரே டேக், ஒரே நாள்ல ஏகப்பட்ட சீன்&னு நடிகை வேகமா போறாராம்... போறாராம்... பட யூனிட்டாருக்கான சாப்பாடு விஷயத்துலகூட சிக்கனம் காட்டுறாராம்... சிக்கனம் காட்டுறாராம்...
Comments
Post a Comment