Heroine refuses to lip-lock | மூன்று நிமிட முத்தம்... முரண்டுபிடித்த நாயகி!

http://thatstamil.oneindia.in/img/2010/06/24-shanthi1-200.jpg
படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும், எந்த அளவும் இறங்கிவந்து நடிப்பேன் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதும், படப்பிடிப்பில் கவர்ச்சிக் காட்சி வந்தால் முரண்டு பிடித்து நடிக்க மறுப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் காட்சிகள்.

இதோ அப்படி ஒரு காட்சி.

படத்துக்குப் பெயர் 'சாந்தி'. ஏ ஒன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிக்க ஒப்பந்தமானவர் மும்பை மாடல் அர்ச்சனா. இப் படத்துக்காக நடிக்க ஒப்பந்தம் ஆனபோது, 'மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தாராம்' நடிகை. கதையையும் இந்தக் காட்சியையும் அவருக்கு முன்கூட்டியே தெரிவித்து சம்மதமும் பெற்றிருந்தாராம் இயக்குநர்.

ஆனால் படம் ஆரம்பித்த இருபதாவது நாளில் தகராறு பண்ண ஆரம்பித்துள்ளார். குறிப்பாக ஒரு முத்தக்காட்சியைப் படம்பிடிக்கும் போது கோபித்துக் கொண்டு போயே போய்விட்டாராம்.

அந்தக் காட்சியில் நடிகைக்கு முத்தம் தரத் தயாராக காத்திருந்த புதுமுக ஹீரோ மகா ஆதித்யா 'வட போச்சே' என வடிவேலு ஸ்டைலில் புலம்பிக் கிடக்க, இன்னொரு பக்கம், 'நான் இப்பவே மும்பை போகணும்' என சலம்பினாராம் அர்ச்சனா.

விஷயத்தை தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டுபோனார் இயக்குநர் முரளி விஷ்வா.

"சரி போனா போகட்டும் போய்யா... ஐஸ்வர்யா ராய் கோவிச்சுட்டுப் போறதா கெட்டுப் போச்சு... கையில கட்டோட நின்னா ஆயிரம் புதுமுகம் கிடைக்கும்..." என்று நடிகையை ஒரேயடியாக பேக் பண்ணுகிற முடிவுக்கு வந்துவிட்டாராம். தயாரிப்பாளர்.

விஷயத்தை நடிகைக்கு 'பாஸ்' பண்ணிவிட்டு அமைதியாகிவிட்டாராம் இயக்குநர். அடுத்து அவர் நினைத்தது நடந்தது. இறங்கி வந்தார் நடிகை.

'குளத்துல இறங்கியாச்சு... ட்ரஸ்ஸோடதான் குளிப்பேன்னு அடம்பிடிச்சா சினிமாவுல ஒத்துக்க மாட்டாங்களே" என நடிகையின் நலம் விரும்பிகள் (?!) ரொம்ப அட்வைஸ் பண்ணியதால், மீண்டும் ஷூட்டிங்குக்கு வந்தாராம் நடிகை.

கேட்டதை விட பல மடங்கு கிறக்கத்துடன் அவர் கொடுத்த முத்தத்தை மூணு கேமிரா வைத்து படம் பிடித்தாராம் முரளி விஷ்வா. ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒரே ஷாட்டாக நீடித்த அந்த முத்தத்தை மூன்று நிமிட முத்தமாக திரையில் தரப்போகிறார்களாம். தேன் குடித்த நரி மாதிரி, இந்த முத்த முற்றுகையிலிருந்து இன்னும் தெளியாமலேயே திரிகிறாராம் அந்த புதுமுகம் ஹீரோ.

முத்தம் கொடுத்துவிட்டு மேக்கப்பைக் கலைத்த நடிகை, 'இப்போ டென்ஷன் இல்லை' என்றாராம்.

அடடா.. ஒரு முத்தம் வாழ்க்கையின் பல தத்துவங்களை புட்டுபுட்டு வச்சிடுச்சே!

Comments

Most Recent