Captain TV to launch News from tomorrow | நாளை முதல் கேப்டன் செய்திகள்!

http://thatstamil.oneindia.in/img/2010/06/03-captain-tv-logo200.jpg
எந்த டிவியும் தங்களைக் கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பைக் கையாண்டதால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தானே ஒரு டிவியை தொடங்கினார். கேப்டன் டிவி என பெயரிடப்பட்ட அந்த சானல் கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

வித்தியாசமான சில நிகழ்ச்சிகளுடன் சினிமாவையே பிரதானமாக கொண்ட பல நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது கேப்டன் டிவி.

இந்த நிலையில் நாளை முதல் கேப்டன் டிவியில் செய்திகள் ஒளிபரப்பாகவுள்ளன.

தினமும் காலை 7.30 மணி; பகல் 1 மணி; மாலை 6 மணிக்கு தலைப்புச் செய்திகள்; இரவு 7.30 மணி மற்றும் இரவு 10 மணி ஆகிய நேரங்களில் கேப்டன் செய்திகள் ஒளிபரப்பாகவுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் செய்தியாளர்களை நியமித்துள்ளதாக கேப்டன் டிவி கூறுகிறது.

சன், கலைஞர் என திமுகவுக்கு இரண்டு முக்கியமான சானல்களும், அதிமுகவுக்கு ஜெயா டிவியும், பாமகவுக்கு மக்கள் டிவியும், காங்கிரஸுக்கு வசந்த், மெகா டிவி என இரு சானல்களும் செய்திகளை வாரி வழங்கி வரும் நிலையில், தற்போது தேமுதிகவின் செய்திகளை மக்களுக்கு அளிக்க வருகிறது கேப்டன் டிவி.

Comments

Most Recent