கனிமொழி படத்துக்கு லைவ் ரெக்கார்டிங்

கனிமொழி படத்துக்கு லைவ் ரெக்கார்டிங்
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் படம் ‘கனிமொழி’. ஜெய் ஹீரோ. அவர் ஜோடியாக இந்தி நடிகை சஷான் பதம்ஸி நடிக்கிறார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர் ஜெய். இவர் எப்போதும் எதிர்கால யோசனையிலேயே ஆழ்ந்திருப்பார். தத்துவத்தை அடிப்படையாக கொண்ட காதல் கதையாக இது உருவாகிறது. படத்தில், கனிமொழி என்ற எந்த கதாபாத்திரமும் கிடையாது. ஆனால் படம் பார்க்கும்போது அர்த்தம் புரியும். இப்படத்துக்கு டப்பிங் பணி கிடையாது. ஷூட்டிங் நடக்கும் இடத்திலேயே நேரடி ஒலிப்பதிவாகவே (லைவ் ரெக்கார்டிங்) வசனங்கள் பதிவு செய்யப்பட்டன. மற்றொரு முக்கிய வேடத்தில் வசந்த் விஜய் நடிக்கிறார். சிதம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சக்ரவர்த்தி இசை அமைக்கிறார். ஏவி.எம்.ஸ்டுடியோவில் இதற்காக, காடு, அதன் நடுவே ஏரி இருப்பதுபோலான அரங்கு அமைத்து பாடலை படமாக்கி வருகிறோம். இவ்வாறு ஸ்ரீபதி ரங்கசாமி கூறினார். தயாரிப்பாளர் டி.சிவா, ஜெய் உடனிருந்தனர்.

Comments

Most Recent