சென்னை: துணை நடிகை ஒருவரும், அவரது கணவரும் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மிக பயங்கர புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்...
சென்னை: துணை நடிகை ஒருவரும், அவரது கணவரும் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மிக பயங்கர புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்க முயல்வதாக நடிகையும், தன்னிடம் ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கணவரும் புகார் கூறியுள்ளனர்.
ஆடுபுலி ஆட்டம், குருஷேத்திரம், எனக்காக உன் காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள துணை நடிகை இந்திரா.
பட்டுவண்ண ரோசாவாம் படத்தில் 2 பாடல்களுக்கு நடனமும் ஆடியுள்ளார்.
இந் நிலையி்ல் அவர் மீது அவரது கணவர் சதீஷ்குமார் இன்று போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் இந்திரா ரூ.30 லட்சம் கேட்டு குண்டர்களை ஏவி மிரட்டுவதாகக் கூறியுள்ளார்.
புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சென்னை சாலிகிராமம் தசரதபுரம் 8வது தெருவில் வசிக்கிறேன். வளசரவாக்கத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளேன். விருகம்பாக்கம் அதிமுக இளைஞர் பாசறை செயலாளராகவும் உள்ளேன்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திரா என்ற 32 வயது பெண் வீடு வேண்டும் என்று என்னை சந்தித்தார். வீடு பார்ப்பது தொடர்பாக நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினோம். ஒரு நாள் அவர் என்னிடம், உங்களை நான் விரும்புகிறேன் என்றார்.
நானும் அவரை காதலித்தேன். கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திடீரென என் வீட்டுக்கு வந்த அவர், “நான் வீட்டை விட்டு வந்து விட்டேன். என் தாயார் என்னை தவறான வழியில் செல்ல வற்புறுத்துகிறார். எனக்கு வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை. என்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.
நான் அவசரப்படாதே, என் வீட்டில் பேசி முடிவு எடுக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். ஆனால், இந்திரா அவரது வீட்டுக்கு செல்லவில்லை. அவரது நண்பர் வீட்டுக்கு சென்று தங்கினார்.
எங்கள் காதல் விஷயத்தை நான் என் தாயாரிடம் கூறினேன். அவர் என்னிடம், ஒரு வருடம் அவகாசம் எடுத்துக்கொள். இந்திராவை பற்றி நன்கு தெரிந்து புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்வோம் என்றார்.
ஆனால், இந்திராவோ, நாம் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார். தாயாரை பணிய வைக்க, 10 தூக்க மாத்திரைகளை என்னிடம் கொடுத்து, இதை சாப்பிட்டால் உயிர் போய் விடாது. உன்னை மருத்துவமனையில் சேர்த்து நான் காப்பாற்றி விடுகிறேன் என்றார்.
நானும் 10 மாத்திரைகளையும் சாப்பிட்டேன். இந்திரா திட்டமிட்டது போல என்னை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, என் தாய்க்கு போன் செய்தார்.
என் தாய் மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்து வருத்தப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்திராவின் தொல்லை அதிகரித்தது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று நச்சரித்தார்.
அவரை நம்பி என் தாயாரிடம் ரூ.1.5 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு இந்திராவின் தோழிகள் அனஷா, அனிதா ஆகியோர் உதவியுடன் பாரிமுனையில் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
சாலிகிராமம் முத்தமிழ் நகரில் வாடகை வீட்டில் குடியேறினோம். 2 மாதம் இந்த வீட்டில் இருந்தோம்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நெய்வேலியில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நான் சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது இந்திரா வீட்டில் இல்லை.
இந்திராவிடம் செல்போனில் தொடர்பு கொண்ட போது, நான் கர்ப்பமாக உள்ளேன். 2 நாட்கள் என் தாய் வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு வருகிறேன் என்றார்.
தொடர்ந்து நான் அவரை போனில் அழைத்தும் அவர் நடத்த வரவில்லை. திடீரென ஒரு நாள் அவரது வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டு ஒருவர் என்னிடம் பேசினார்.
உடனடியாக உன் சொத்தைப் பிரித்துவிட்டு வா, இல்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் ஜெயிலில் தள்ளி விடுவோம் என்றார்.
அப்போது தான் என் சொத்துக்களுக்காக இந்திரா என்னை திருமணம் செய்தது. இதையடுத்து அதையடுத்து அவரை பற்றி நான் விசாரித்தேன்.
அப்போது இந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த மகேஷ் என்பவரை 1996ம் ஆண்டு அவர் திருமணம் செய்து ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்துள்ளது தெரியவந்தது.
பின்னர் மகேசை துரத்தி விட்டு ஆபாச படங்களிலும் இந்திரா நடித்து வந்தாகத் தெரிகிறது. காபரே நடனக் குழுவிலும் அவர் இருந்துள்ளார்.
முதல் திருமணத்தை மறைத்துவிட்டு சொத்துக்காக என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.
இந் நிலையில் இப்போது ரவுடிகளை ஏவி விட்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தற்போது என் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் இந்திராவின் தம்பி ரகு அடியாட்களுடன் வந்து எடுத்து சென்றுள்ளார். இது பற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.
வடபழனி பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பணிபுரியும் ஒருவர் மூலம் கட்டப் பஞ்சாயத்து பேசி ரூ.30 லட்சம் கேட்டு இந்திரா என்னை தொடர்ந்து மிரட்டுகிறார். எனவே இந்திரா மீதும் அவர் தம்பி, தாய் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
ஆனால், சதீஷ்குமாரின் புகார் மனுவை ஏற்க கமிஷ்னர் அதிகாரிகள் மறுத்து விட்டனர். வடபழனி உதவி கமிஷனரை சந்தித்து புகார் கூறுமாறு கூறிவிட்டனர்.
இதையடுத்து கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிருபர்களிடம் தன் புகார் மனு விவரங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது, நடிகை இந்திராவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது சதீஷ்குமாருக்கும் இந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சதீஷ்குமார், 10 ஆண்டுக்கு முன்பு ரூ.400 வாடகை வீட்டில் தங்கியிருந்த இந்திராவுக்கு இன்று சென்னையி்ல் 7 வீடுகள் உள்ளன. அவரால் ஏமாற்றப்பட்ட மகேஷ் தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு திரிகிறார். என்னையும் இப்போது ஏமாற்றியுள்ளார். என்னைப் போல மேலும் பலர் அவரிடம் ஏமாந்திருக்கலாம்.
இந்திராவுக்கு ஒரே குறிக்கோள் பணம் மட்டுமே. காபரே நடனம் பார்க்க வருபவர்களிடம் பேசி மயக்கி, காதலை வளர்த்து ஏமாற்றுவது அவரது பாணி என்றார்.
நண்பர்களுக்கு விருந்தாக்கினார்-கணவர் மீது இந்திரா புகார்:
சதீஷ்குமார் நிருபர்களிடம் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோதே சற்று தொலையில் இந்திராவும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கண்ணீருடன் அவர் கூறுகையில், சதீஷ்குமார் முதலில் டிரைவராகதான் என்னிடம் வேலைக்கு சேர்ந்தார். அவரை ரூ.7 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்த்துக் கொண்டேன்.
வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் அவர் என்னை காதலிப்பதாக சொன்னாக். ஆனால் நான் அவர் காதலை ஏற்கவில்லை.
ஆனால், நான் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். 3 முறை தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். நான்தான் அவரை காப்பாற்றினேன்.
நாளடைவில் அவர் மீது எனக்கு இரக்கம் ஏற்பட்டது. இதனால் நானும் அவரை அவரை காதலித்தேன். கடந்த பிப்ரவரி மாதம் எங்களுக்குத் திருமணம் நடந்தது. அதன் பிறகு 2 மாதத்திலேயே என்னை அவர் சித்ரவதை செய்யத் தொடங்கி விட்டார்.
அவர் அதிமுகவில் சேர்ந்த பிறகு என்னை துன்புறுத்துவது அதிகரித்தது. தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து மது விருந்து கொடுப்பார்.
அதன்பிறகு கோழிக்கறி வாங்கி வந்து பொறித்து கொடுக்கச் சொல்வார். போதை தலைக்கேறியதும் என்னை நண்பர்கள் முன்பு ஆபாச நடனம் ஆடுமாறு வற்புறுத்துவார். நான் மறுத்தால் என்னை அடித்து, உதைப்பார்.
ஒரு முறை என்னை டிவி கேபிள் வயர் மூலம் கழுத்தை நெரித்து கொல்லவும் முயன்றார். இதற்காக நான் மருத்துவமனையில் தங்கி பல நாட்கள் சிகிச்சை பெற்றேன்.
மீண்டும் வீட்டுக்கு வந்தபோது என்னை அடித்து துன்புறுத்தி எனது 35 பவுன் நகைகளை பறித்துக் கொண்டார். அப்போது நான் 3 மாதம் கர்ப்பமாக இருந்தேன். நான் கர்ப்பிணி என்றும் பாராமல் துன்புறுத்தினார். கருவை கலைக்கச் சொல்லி உதைத்தார்.
நான் நடிகை என்பது தெரிந்தும், திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றார். இதனால் நானும் நடிக்கப் போகவில்லை.
ஆனால் என்னை நண்பர்களுக்கு விருந்தாக்கவே அவர் இப்படி திட்டம் தீட்டியது பிறகுதான் தெரிந்தது. நான் ராயப்பேட்டையில் உள்ள கிளப்பில் ஆபாச நடனம் ஆடுவதாக பொய் புகார் கூறியுள்ளார். அவர்தான் கோடம்பாக்கத்தில் பெண்களை வைத்து தொழில் (விபச்சாரம்) செய்து கொண்டிருக்கிறார்.
நான் 15 வயதில் சினிமாவில், குரூப் டான்சராக சேர்ந்தேன். அப்போது ஒரு இடத்தில் இலவச சுயம்வரம் நடந்தது. அப்போது ஒரு நபருக்கு மணப்பெண் இல்லாமல் இருந்தது. உடனே என்னை பிடித்து ஜோடியாக்கி விட்டனர். அந்த வயதில் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. இதுபற்றி சதீஷ்குமாரிடம் நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
ஆனால் நான் அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக இப்போது பொய் புகார் கூறுகிறார்.
என்னை ரோட்டில் ஆள் வைத்து என்னை மிரட்டினார்.
இதுபற்றி நான் ஏற்கனவே போலீசில் புகார் செய்திருந்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கடந்த மாதம் 3ம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் நேரில் இவர் மீது புகார் கொடுத்தேன். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. என்னை போலீசார் தான் அவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
நான் சதீஷ்குமாருடன் வாழ விரும்பவில்லை. அவரிடம் இருந்து விவாகரத்து பெற மனு செய்துள்ளேன். மீண்டும் நான் சினிமாவில் நடிப்பேன் என்றார்.
Comments
Post a Comment