நித்யானந்தாவாக ரமேஷ் அரவிந்த்

http://photogallery.indiatimes.com/celebs/indian-stars/ramesh-aravind/Ramesh-Aravind/photo/2419476/Ramesh-Aravind.jpg
நித்யானந்தா சாமியாரின் தற்போதைய பிரச்னையை மையமாக வைத்து, கன்னடத்தில் படம் தயாராகிறது. இதில், நித்யானந்தாவாக ரமேஷ் அரவிந்த் நடிக்கிறார். நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் ஒரே நாளில் நித்யானந்தாவை உலகம் அறிய வைத்தது. பரபரப்பான இச்சம்பவத்தை வைத்து, ராம் கோபால் வர்மா இந்தியில் படம் இயக்குகிறார். இந்நிலையில் கன்னடத்திலும் அவரது கதையை படமாக எடுக்கின்றனர். கஜேந்திர அஜார் இயக்கும் இந்தப் படத்தில், ரமேஷ் அரவிந்த் சாமியாராக நடிக்கிறார். இதுபற்றி ரமேஷ் கூறும்போது, ‘’சாமியார் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது. காமெடியாக தயாராகும் இந்தப் படம், நித்யானந்தாவின் கதையா என்பதை சொல்ல இயலாது. இது மசாலா படமாக உருவாகிறது’ என்றார்.

Comments

Most Recent