‘நான் நடிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்தால், கலாசாரத்துறை அமைச்சர் வீட்டு முன்பு தற்கொலை செய்துகொள்வேன் என்றார் ...
‘நான் நடிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்தால், கலாசாரத்துறை அமைச்சர் வீட்டு முன்பு தற்கொலை செய்துகொள்வேன் என்றார் திலகன். திருவனந்தபுரத்தில், நிருபர்களை சந்தித்த திலகன் கூறியதாவது: மலையாள படங்களில் நடிக்க எனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் கேரள கலாசாரத்துறை அமைச்சர் எம்.ஏ.பேபி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர், சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்கிறார். நான் கொடுத்துள்ள புகாருக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், அமைச்சர் பேபி வீட்டு முன் தற்கொலை செய்யவும் தயங்கமாட்டேன். இவ்வாறு திலகன் கூறினார்.
Comments
Post a Comment