மும்பையில் மனீஷா கொய்ராலாவின் திருமண வரவேற்பு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Bollywood-news-173.jpg நடிகை மனீஷா கொய்ராலாவின் திருமண வரவேற்பு மும்பை ஜுகுவில் நடக்கிறது. நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபர் சம்ரத்&மனீஷா திருமணம் ஜூன் 19ம் தேதி காத்மாண்டுவில் நடக்கிறது. அதற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம். திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மும்பை ஜுகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். மனீஷா&சம்ரத் திருமண விழா நேபாள இந்து வழக்கப் படி மூன்று நாட்கள் நடக்கும். திரு மணத்துக்கு முன்பு நடக்கும் நிச்சயதார்த்தம், மெகந்தி விழாக்களில் மனீஷா அணியும் உடை களை பிரபல டிசைனர்கள் சப்யாச்சி முகர்ஜி மற்றும் அன்னா சிங் ஆகியோர் வடிவமைக் கின்றனர். திருமணத்தன்று தங்கம் மற்றும் வைரம் இழைக்கப் பட்ட சிவப்பு நிற சேலையை மனீஷா அணிந் திருப்பார்.

Comments

Most Recent