Actress Jyothika to deliver her 2nd child by next week | ஜோதிகாவுக்கு அடுத்த வாரம் 2வது குழந்தை

http://4.bp.blogspot.com/_zHh2s8KidXI/SKKowPmfpoI/AAAAAAAABDE/0RJ6T7Ln2eA/s400/surya-jyothika-daughter-birthday-3.jpg
நிறைமாத கர்ப்பமாக உள்ள நடிகை ஜோதிகாவுக்கு அடுத்த வாரம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தேதி குறித்துக் கொடுத்துள்ளனராம்.

நடிகர் சூர்யா, ஜோதிகா இருவரும் நீண்ட காலமாக காதலித்து பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் மணம் புரிந்து கொண்டனர். திருமணமான கையோடு அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தியா என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோதிகா மீண்டும் கர்ப்பமானார். தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள ஜோதிகாவுக்கு அடுத்த வாரம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 2வது குழந்தையை வரவேற்க சூர்யா குடும்பத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

Comments

Most Recent