Entertainment
›
Cine News
›
Actress Anjali injured in accident | சூட்டிங்கில் விபத்து! நடிகை அஞ்சலி கை முறிந்தது!!
சினிமா சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் நடிகை அஞ்சலியின் கை எலும்பு முறிந்தது. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமானவர்...
மகாராஜா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் சென்னையில் நடந்தது. இதில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டு ஸ்கூட்டி ஓட்டும் காட்சியில் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த அஞ்சலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறித் துடித்த அஞ்சலியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அஞ்சலியை பரிசோதித்த டாக்டர்கள் கை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கைக்கு கட்டு போடப்பட்டது. தற்போது அஞ்சலி 15 நாள் ஓய்வில் இருக்கிறார்.
Comments
Post a Comment