மனிஷா கொய்ராலாவுக்கு 18-ம் தேதி திருமணம்

http://www.indiasmallbusinesses.com/mumbai/images/bombay-manisha-film.jpg

பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு வரும் 18ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தன்னைவிட 7 வயது குறைந்தவரை மணக்கிறார். மனிஷா கொய்ராலா நேபாள நாட்டை சேர்ந்தவர். இந்தி படத்தில் நடித்த இவர் மணிரத்னத்தின் ‘பம்பாய்‘ படம் மூலம் தமிழில் அறிமுகமாகமானார். நடிகர் ரஜினிகாந்துடன் பாபா, கமலஹாசனுடன் இந்தியன், அர்ஜுனுடன் முதல்வன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதேபோல் தெலுங்கு மற்றும் இதர மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சுமார் 40 வயது ஆகும் இவருக்கு, வரும் 18ம் தேதி நேபாள தலைநகரமான காத்மாண்டில் திருமணம் நடைபெற உள்ளது. நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபர் சாம்ராட் தகால் என்பவரை மணக்க உள்ளார். இவர் மனிஷா கொய்ராலாவை விட 7 வயது குறைவானவர். இவர்களது திருமணம் கிழக்கு காத்மாண்டில் உள்ள கோகர்ணா வனத்துறைக்கு சொந்தமான ரசாட் மஹாலில் நடைபெற உள்ளது. இத்திருமணத்தில் முக்கிய விஐபிக்கள் உள்பட பிரபல இந்தி மற்றும் தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகளும், இயக்குனர்களும் கலந்துகொள்ள உள்ளனர். மனிஷாவுக்கு ஏற்கனவே வேறு நபர்களுடன் 2 முறை திருமண நிச்சயதார்த்தம் நடந்து பின்னர் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent