ராவணன் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. 350 கோடி ரூபாய்க்கு உலகளவில் பிஸினஸ் ஆகியுள்ளது. 550 கோடி ரூபாய் வரை இப்படம் வ...
ராவணன் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. 350 கோடி ரூபாய்க்கு உலகளவில் பிஸினஸ் ஆகியுள்ளது. 550 கோடி ரூபாய் வரை இப்படம் வசூல் செய்யும் என பேசப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ராவணன் படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். ராவணன் ரீலிஸ் நாளில் எல்லா தியேட்டர்களிலும் ராணவன் மட்டுமே திரையிடப்பட இருக்கிறது. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் லண்டனில் தன்வசம் உள்ள தியேட்டர்கள் அனைத்தையும் ராவணனுக்காக கொடுத்துள்ளதுடன், எந்த நிபந்தனைகளும் விதிக்கவில்லை என்பது ஹைலைட். இயக்குனர் மணிரத்னத்தின் சரித்திரத்திலேயே அவர் இயக்கிய படங்களில் பட ரிலீசுக்கு பின் கதை உள்ளிட்ட எந்தவித உரிமையும் அவருக்கு கிடையாது என அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறையாகும். மொத்த உரிமையும் ரிலையன்சுக்கும், சோனி நிறுவனத்திற்கும் மட்டுமேவாம். மணிரத்னர், ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரசூல் பூக்குட்டி என ராவணன் சம்பந்தப்பட்ட அனைவரும் உலக மார்க்கெட் உடையவர்கள் என்பதுதான் ராவணனுக்கு இத்தனை எதிர்பார்ப்பும், ஏகபோக விற்பனையும் கிடைக்க காரணமாய் இருந்திருக்கிறது.
Comments
Post a Comment