Producer lodges complaint on Srikanth | நடிகர் ஸ்ரீகாந்த் - தயாரிப்பாளர் மோதல்

http://thatstamil.oneindia.in/img/2010/05/09-srikanth-poorna200.jpgஅட்வான்ஸைத் திரும்பத் தர மறுக்கிறார் என்று நடிகர் ஸ்ரீகாந்த் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் தரப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் நடித்த பூ, இந்திர விழா, ரசிக்கும் சீமானே படங்கள் சமீபத்தில் ரிலீசாயின. தற்போது துரோகி என்ற படத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த், மீது தயாரிப்பாளர் பி.எஸ்.சேகர் ரெட்டி தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான மாத்தியோசி படத்தின் தயாரிப்பாளர் இவர்.

சில மாதங்களுக்கு முன் ஸ்ரீகாந்தை வைத்து 'காவேரித் தலைவன்' என்ற படத்தை எடுக்க முடிவு செய்தார். இதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. திடீரென்று அப்படம் நின்று போனது.

இந்த நிலையில் காவேரித்தவைன் படத்துக்காக ஸ்ரீகாந்துக்கு ரூ.15 லட்சம் அட்வான்ஸ் தொகை கொடுத்ததாகவும் அப்பணத்தை திருப்பி கேட்டால் தர மறுக்கிறார் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பி.எஸ். சேகர் ரெட்டி புகார் மனு அளித்துள்ளார். ஆனால் ஸ்ரீகாந்தோ ரூ.3 லட்சம்தான் அட்வான்ஸ் கொடுத்தார் என்று கூறுகிறாராம். தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் பி.எஸ். சேகர் ரெட்டி கூறுகையில், "காவேரித்தலைவன் படத்தை ஸ்ரீகாந்தை வைத்து பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டேன். அதற்காக ரு.15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஸ்ரீகாந்தை வைத்து பல கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியல்ல என்றும், வியாபாரம் ஆகாது என்றும் சக தயாரிப்பாளர்கள் சிலர் கூறினர். இதையடுத்து காவேரித்தலைவன் படத்தைக் கைவிட்டேன்.

அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கேட்டபோது தர மறுத்துவிட்டார். அதோடு ரூ.3 லட்சம்தான் அட்வான்ஸ் வாங்கினேன் என்றும் பொய் சொல்கிறார். அவரது குடும்ப விஷயத்தில் நடந்த மாதிரியே என் விஷயத்திலும் நடக்கப் பார்க்கிறார். தயாரிப்பாளர் சங்கம் மூலம் எனது பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது..." என்றார்.

ஆனால் ஸ்ரீகாந்த் இதனை முற்றிலும் மறுத்துள்ளார்.

"எனக்கு அவர் கொடுத்தது 3 லட்சம் ரூபாய்தான். இதைத் திருப்பித் தந்துவிடவும் தயார். இவர் படத்தை நம்பி கால்ஷீட் கொடுத்தேன். வேறு பட வாய்ப்பையும் மறுத்தேன். அதற்கு என்ன சொல்லப் போகிறார்... என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க அவருக்கு உரிமையில்லை" என்கிறார் ஸ்ரீகாந்த்.

Comments

Most Recent