'Play boy' Jeeva | பிளேபாய் கேரக்டரில் ஜீவா

'Play boy' Jeeva
சிங்கம் புலி’ படத்தில் பிளேபாய் கேரக்டரில் நடிப்பதாக ஜீவா கூறினார். படம் பற்றி அவர் கூறியதாவது: ‘சிங¢கம் புலி’ படத்தை இயக்குனர் ஜனநாதனின் உதவியாளர் சாய்ரமணி இயக்குகிறார். இதில் திவ்யா, சவுந்தர்யா ஜோடி. முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதில் மீனவனாகவும் பிளேபாயாகவும் இரு வேடங்கள். பிளேபாய் வேடம், இதுவரை வந்ததிலிருந்து வித்தியாசமாக இருக¢கும். இரண்டில் ஒன்று வில்லன் வேடமாக இருக்கும். யார் வில்லன் என்பது கிளைமாக்சில்தான் தெரியும். கோவளத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இன்னும் 15 நாள் மட்டும் ஷூட்டிங் பாக்கி. ‘கோ’ படத்தின் அடுத்த கட்ட ஷெட்யூல் 24&ம் தேதி தொடங்குகிறது. ‘ரவுத்திரம்’ படப்பிடிப்பு, 15 நாட்கள் நடந்துள்ளது. ‘சிங்கம் புலி’ முடிந்ததும் அதன் அடுத்த ஷெட்யூல் தொடங்கும். ‘வந்தான் வென்றான்’ படம் ஆகஸ்டில் தொடங்கும். இவ்வாறு ஜீவா கூறினார்.

Comments

Most Recent