Entertainment
›
Cine News
›
Kollywood to celebrate Ilayaraja birthday | திரையுலகமே கொண்டாடும் இளையராஜா பிறந்த நாள்!
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முதல் முறையாக விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள் அவரது வாரிசுகள். இந்த விழாவில் தமிழ்த் திரையுலகமே பங்கேற்கிறத...
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முதல் முறையாக விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள் அவரது வாரிசுகள். இந்த விழாவில் தமிழ்த் திரையுலகமே பங்கேற்கிறது.
வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி இளையராஜாவுக்கு 67வது வயது பிறக்கிறது. இதனை மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரினி ஆகியோர் எப்போதும் இல்லாத அளவு சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக, தனது பிறந்த நாளை பெரிதாகக் கொண்டாடியதில்லை ராஜா. அந்த நாளில் தனது தாயார் சமாதிக்கோ, திருவண்ணாமலை ஆசிரமத்துக்கோ அல்லது மூகாம்பிகை கோயிலுக்கோ சென்றுவிடுவது அவர் வழக்கம்.
ஆனால் இந்த பிறந்த நாள் விழாவில் பத்ம பூஷன் விருது பெற்றமைக்காகவும் அவரது சாதனைகளைப் பாராட்டும் முகமாகவும் பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர் அவரது வாரிசுகள்.
ஜூன் மாதம் 5ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் இதற்கென விமரிசையான விழா நடக்கவிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த விழாவுக்கு ஒப்புக்கொள்ளாத ராஜா, மகன்கள் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இவ்விழாவில் ஓட்டுமொத்த திரையுலகமும், எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட இலக்கிய பிரமுகர்களும் பங்கேற்று இசைஞானிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்!
Comments
Post a Comment