Entertainment
›
Cine News
›
A FEAST TO GORIPALAYAM FILM UNIT! கோரிப்பாளையம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு கிடாவெட்டி விருந்து
A FEAST TO GORIPALAYAM FILM UNIT! கோரிப்பாளையம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு கிடாவெட்டி விருந்து
நாடோடிகள் ஹிட் படத்தை கொடுத்த மைக்கேல் தயாரித்துள்ள படம் கோரிப்பாளையம் ராசு மதுரவன் இயக்கியுள்ளார். வருகிற 7-ந்தேதி இப்படம், ரிலீசாகிறது....
நாடோடிகள் ஹிட் படத்தை கொடுத்த மைக்கேல் தயாரித்துள்ள படம் கோரிப்பாளையம் ராசு மதுரவன் இயக்கியுள்ளார். வருகிற 7-ந்தேதி இப்படம், ரிலீசாகிறது.
கோரிப்பாளையம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு கிடாவெட்டி விருந்து கொடுக்கப்பட்டது. வளசரவாக்கத்தில் உள்ள கார்டனில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
கோரிப்பாளையம் பட கதாநாயகர்கள் ஹரீஸ், ராமகிருஷ்ணன், விக்ராந்த், ரகுவண்ணன் மற்றும் பிரகாஷ் சிங்கம்புலி, மயில்சாமி, இளவரசு, அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் படத்தில் நடித்த கதாநாயகிகள் பூங்கோடி, சுவாசிகா, ஜாகர்த்தி, இயக்குனர்கள் ஜெகன் நாத், ரவிமரியா, நந்தா பெரியசாமி, மனோபாலா, ராஜ்கபூர் ஆகியோரும் விருந்தில் பங்கேற்றனர்.
விருந்துக்கு வந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், டைரக்டர் ராசுமதுரவன், வரவேற்றனர்.
கோரிப்பாளையம் பட இசையமைப்பாளர் சபேஷ் முரளி, ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுரேஷ், அர்ஸ் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோரும் விருந்தில் கலந்து கொண்டனர்.
திரையுலகில் படம் ரிலீசையொட்டி நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்களுக்கு கிடாவெட்டி விருந்து கொடுப்பது இதுவே முதல் முறை என்றனர்.
கோரிப்பாளையம் படத்துக்கு பெரிய பட்ஜெட் படங்கள் போல 200 பிரிண்ட்கள் போடப்பட்டு இருப்பதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
Comments
Post a Comment