Entertainment
›
Cine News
›
Enthiran - Secret Rajini in a Seperate room | எந்திரன் : தனி அறையில் ரகசிய ரஜினி
சுவிஸ் பேங்கில் போட்ட பணம் மாதிரி 'எந்திரன்' ரகசியம் காக்கப்பட்டாலும் அவ்வப்போது கசிய ஆரம்பிக்கும் தகவல், எந்த துவாரத்தின் வழியே ...
சுவிஸ் பேங்கில் போட்ட பணம் மாதிரி 'எந்திரன்' ரகசியம் காக்கப்பட்டாலும் அவ்வப்போது கசிய ஆரம்பிக்கும் தகவல், எந்த துவாரத்தின் வழியே புகைகிறது என்பது ஷங்கருக்கே தெரியாத ரகசியம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் படத்தின் அனைத்து பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம். எடிட்டிங் உட்பட இதுவரை 90 சதவீத 'எந்திரன்' வேலைகள் முடிவடைந்துவிட்டன. இன்னும் இரண்டொரு மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து பெட்டி தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் 'எந்திரன்' தோற்றத்திற்காக நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருக்கிறது. இதற்காக மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவிடப்படுகிறதாம். இரவு பகலாக உழைத்தால்கூட கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் எழுபது நாட்கள் தேவைப்படுகிறதாம். சாபு சிரில் போட்ட பிரமாண்ட செட்டில் எந்திரன் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் இதுவரை இந்திய சினிமாவில் இடம்பெற்றிராத ஒலி அமைப்புகளை கொண்டு பின்னணி இசையில் மிரட்டவுள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான். இதற்காக ஹங்கேரியிலிருந்து வித்தியாசமான இசைக்கருவிகளும், இசைக்கலைஞர்களும் வரவழைக்கப்படுகிறார்கள்.
க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கியபோது கேமிராமேன்,இயக்குனர் ஷங்கர், ரஜினி மூவர் மட்டுமே இருந்துள்ளனர். எதிர்பார்க்காத அளவிற்கு திடீர் திருப்பம் ஏற்படுத்தும் காட்சி என்பதால், அந்த சஸ்பென்ஸ் லீக் ஆகாமல் இருக்கவே ரகசியமாக இயக்கினாராம் ஷங்கர்.
Comments
Post a Comment