Dream of Ambani - Ambasamuthiram Ambani | அம்பானியின் கனவு

Ambasamuthiram Ambani  Ambasamuthiram Ambani  Ambasamuthiram Ambani  Ambasamuthiram Ambani  Ambasamuthiram Ambani  Ambasamuthiram Ambani 

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/ambasamuthiram-ambani-01/bwoods_ambasamuthiram-ambani-09.jpg
‘திண்டுக்கல் சாரதி’ வெற்றிக்குப் பிறகு கருணாஸ் நாயகனாக நடிக்கும் படம் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’. கருணாஸ் நடித்த பல படங்களுக்கு காமெடி டிராக் எழுதிய ராம்நாத் இதில் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரிடம் படத்தைப் பற்றி கேட்டோம். ‘‘அம்பாசமுத்திரத்தில் சாதாரண எழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு அம்பானி போல் மிகப் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைக்கிறான். தன்னுடைய கனவு மெய்ப்பட வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வருகிறான். கனவு நனவாகும் வேளையில் திடீரென ஒரு பிரச்னையை சந்திக்கிறான். நாயகன் தன்னுடைய லட்சியத்தை அடைந்தானா... இல்லையா என்பது தான் கதை.

கருணாஸ் ஜோடியாக நவ்னீத்கவுர் நடிக்கிறார். காமெடியில் தனக்கென ஒரு பாணியை அமைத்து வெற்றி கண்ட கருணாஸ் இதில் கதையின் நாயகனாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். ‘ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்’ என்ற பாடலுக்கு ரகசியா நடனமாடியிருக்கிறார். படத்தின் எல்லா பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். கே.வி.ஆனந்திடம் பல படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செல்லத்துரை புலித்தேவன் என்ற பெயர் மாற்றத்துடன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் இருந்தாலும் இன்றைய இளைஞர்களின் சிந்தனைக்கு ஊக்கம் தரும் வகையில் உற்சாகமான படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் ராம்நாத்.

Comments

Most Recent