Director Bakyaraj`s metaphorical explanation of cine problems | நல்ல படங்கள் மட்டுமே சினிமா பிரச்னைக்கு தீர்வு : பாக்யராஜ்!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-989.jpg

கார்த்திக் ஜெய் மூவீஸ் தயாரிக்கும் படம் ‘நெல்லு’. புதுமுகங்கள் சத்யா, பாக்யாஞ்சலி நடிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் முதல் சிடியை வெளியிட பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். பின்னர் பாக்யராஜ் பேசியதாவது:

சினிமாவுக்கு தற்போது பல பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. அதை போக்க சமீபகாலமாக பலர், பல அபிப்ராயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனது ஒரே அபிப்ராயம்தான். அதை அன்றைக்கும் சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன். பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் கதையில், காட்சிகளில் புது விஷயம் இருக்க வேண்டும். படத்தில் புதுமை இல்லாவிட்டால் எந்த சலுகைகளாலும் பயன் இல்லை. பலூன் எந்த கலராக இருந்தாலும் உள்ளே இருக்கிற காற்றை பொருத்துதான் அது உயரமாக பறக்கும். அதேபோல விஷயமுள்ள படம்தான் வெற்றி பெறும். எல்லா பிரச்னைகளுக்கும் நல்ல படங்களை எடுப்பதே தீர்வு. இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

விழாவில் நடிகை அஞ்சலி, நடிகர்கள் மனோஜ், அசோக், கருணாஸ், கார்த்திக் ஜெய், இசை அமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், பாடலாசிரியர் நா.முத்துகுமார் ஆகியோர் பேசினர். முன்னதாக இயக்குனர் சிவசங்கரன் வரவேற்றார். முடிவில் தயாரிப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Comments

Most Recent