இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய பட விழாவை புறக்கணிப்பதாக தமிழ் திரையுலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை...
இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய பட விழாவை புறக்கணிப்பதாக தமிழ் திரையுலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி, இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தினர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரில் எண்ணற்ற ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்காக பல போராட்டங்களை பலரும் நடத்தினோம். அதன் பின்பும் இலங்கை அரசு போரை நிறுத¢தவில்லை. உடல் உறுப்புகளை இழந்து, அந்த போரின் நினைவு சின்னங்களாய் நம் தமிழர்கள் பலர¢ அங்கு உள்ளனர். அவர்களுக்கு நமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் சர்வதேச பட விழாவை கொழும்பில் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். அங்கு விழா நடந்தால் அதை தமிழ் திரையுலகம் புறக்கணிக்கும். இந்திய திரையுலகினரும் அவ்விழாவை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Comments
Post a Comment