Aishwarya Bachan not going Lanka

ஐஸ்வர்யா ராய் கொழும்பு செல்லவில்லை! 
http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1028.jpg
கொழும்புவில் நடக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவிருப்பதாலும், வேறு சில காரணங்களாலும் அவர் ஐஃபா விருது விழாவில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் இலங்கை செல்லும் திட்டத்திலில்லை என்றும், ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கேன்ஸ் திரைப்பட விழாவின் துவக்க நாள் நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வருகிறார் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய் கொழும்பு செல்லாததன் மூலம், அவர் நடித்துள்ள தமிழ்ப் படங்களான ரஜினியின் எந்திரன் மற்றும் மணிரத்னத்தின் ராவணனுக்கு வரவிருந்த பல நெருக்கடிகளைத் தவிர்த்துள்ளது.

Comments

Most Recent