Yaavarum Kelir is now renamed as Karunyam

http://www.extramirchi.com/gallery/albums/south/actors/kamal/Kamal_Hassan_new_look5.jpg
நடிகர் கமல்ஹாசன் அடுத்த நடிக்கவிருந்த புதிய படத்திற்கு யாவரும் கேளீர் என்று பெயர் சூட்டியிருந்தனர். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார். நடிகர் மாதவனும், கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். முழுநீள காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் டைட்டிலை இப்போது காருண்யம் என்று மாற்றியிருக்கிறார்கள். முக்கோண காதல் கதையான காருண்யம் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே தசாவதாரம் படத்திற்கு பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கும் தேவிஸ்ரீ இப்படத்தில் முழு இசையையும் கவனிக்கப் போகிறார். இதேபோல அன்பே சிவம் படத்திற்கு பிறகு மாத‌வன் கமலுடன் இணையும் படம் இது. காருண்யம் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Comments

Most Recent