Vijay TV`s Kathaiyalla Nijam programme gets good responce

http://2.bp.blogspot.com/_Uno_emuDLJc/S6j3WOxv4hI/AAAAAAAADI4/3zp5mK1g6AY/s320/Kadhai+Alla+Nijam.jpg
புதுப்பொலிவுடன் ஒளிபரப்பப்பட்டு வரும் கதையல்ல நிஜம் நிகழ்ச்சிக்கு நேயர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக விஜய் டி.வி., தெரிவித்துள்ளது. நடிகை லட்சுமி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 8 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டி.வி.,யில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல நிஜ சம்பவங்களை சுவாரஸ்யமாக ஒளிபரப்பப் பட்டது. பின்னர் ஏனோ காரணங்களால் கதையல்ல நிஜம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் கதையல்ல நிஜம் நிகழ்ச்சி அதே கம்பீரத்துடன் ஒளிப்பப்பட்டு வருகிறது. நடிகை லட்சுமியின் கம்பீரம், தைரியம், ஆளுமை, பிரச்னைகளை கையாளும் நேர்த்தி ஆகியவை நேயர்களை கவர்ந்துள்ளதாக விஜய் டி.வி., தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை பல விறுவிறுப்பான கதைகள் இடம் பெற்றுள்ளன. காதலர்கள் இரண்டு பேர் தங்கள் பெற்றோர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எதிர்பாராத சம்பவம் நடந்தது. அந்தப் பெண் தனக்கு `காதலன்தான் முக்கியம். எனக்கு இதே மேடையில் திருமணம் நிச்சயம் செய்ய வேண்டும்' என்று பிடிவாதமாக இருந்தார். மேலும் நானே போகர், சித்தர் என்று கூறிக் கொண்டு வந்திருந்த ஒரு பெண்மணி நடிகை லட்சுமி கேட்ட கேள்விகளுக்கு முழுவதுமாக பதிலளிக்காமல் கோபித்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இனி வரும் வாரங்களில் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளை நேயர்களின் முன்னிலையில் கொண்டு வர தயாராகிக் கொண்டிருக்கிறது. `காதலை எதிர்த்த பெற்றோரை ஒதுக்கி வைத்த கிராமம்' என்பது போன்ற பல புதுமைக் கதைகளை கொண்டு வருகிறது நிகழ்ச்சி. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

Comments

Most Recent