Sivappu mazhai movie banned in Srilanka | இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை!


Sivappu mazhai movie banned in Srilankaஇலங்கையில் நடைபெறும் திரைப்பட விழாவுக்கு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமா ஒன்றிற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாத‌னைக்காக 12 நாட்களில் உருவாக்கப்பட்ட படம் சிவப்பு மழை. உலகிலேயே மிக குறைந்த நாட்களில் தயாரான முழுநீள பொழுதுபோக்கு படம் இதுதான். இந்த படத்தில் சுரேஷ் ஜோகிம் நாயகனாகவும், மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். படத்தின் கதைப்படி, இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தமிழ்நாட்டுக்கு வந்து, மத்திய அமைச்சரின் மகளை கடத்தி, தனது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறான். சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம், இப்போது தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு, இலங்கையில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் பற்றிய கதையம்சம் கொண்ட படம் என்பதால் இலங்கையில் இப்படத்துக்கு தடை விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Most Recent