Priyamani to take Jo's place | கன்னடத்தில் ரீமேக் ஆகிறது குஷி

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-908.jpg
பல வருடங்களுக்கு முன்பு விஜய், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் ‘குஷி’. எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார். இப்போது இந்த படம் ‘ஏனோ ஒன்ந்தரா‘ என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. உதயசந்திரா புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மகேஷ் இயக்குகிறார். விஜய் நடித்த கேரக்டரில் கணேசும், ஜோதிகா நடித்த கேரக்டரில் ப்ரியாமணியும் நடிக்கிறார்கள். “ஜோதிகா எனக்கு பிடித்த நடிகை. அவர் நடித்த கேரக்டரில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர் அளவுக்கு நடிக்க முடியாவிட்டாலும் அந்த கேரக்டரை உள்வாங்கி நடிக்க முயற்சிப்பேன்” என்கிறார் ப்ரியாமணி.

Comments

Most Recent