Piaa is happy about Bale Pandiya | சோலோவா கலக்கறேன்! - பியா

http://thatstamil.oneindia.in/img/2010/04/18-bale-pandia200.jpg
அஜீத்துடன் பெரிய படத்தில் அறிமுகமானாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் சொல்லிக் கொள்வது மாதிரி அமையவில்லை பியாவுக்கு.

பொய் சொல்லப் போறேன், கோவா போன்ற படங்களில் கும்பலோடு ஒருவராய்த்தான் வந்து போனார்.

ஆனால் இப்போது முதல் முறையாக சோலோ ஹீரோயினாக நடித்துள்ளாராம், பலே பாண்டியா படத்தில்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"முதல் முறையாக நான் தனி நாயகியாக நடித்துள்ள படம் பலே பாண்டியா. இந்தப் படத்தில் புதிய இசையமைப்பாளர். ஆனால் பாடல்கள் அசத்தலாக வந்துள்ளன. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்காக சென்னையிலிருப்பேன்" என்று கூறியுள்ளார்.

இன்று காலை சத்யம் திரையரங்கில் நடக்கிறது பலே பாண்டியாவின் பாடல் வெளியீட்டு விழா. பிரபல டிசைனர் சித்தார்த் முதல்முறையாக இயக்கியுள்ள படம் இது. கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழுவில் நடித்த விஷ்ணு நாயகனாக நடித்துள்ளார். தேவன் ஏகாம்பரம் என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார்.

Comments

Most Recent