சென்னை, ஏப். 14: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஜாக் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் புதிய கேபிள் டி....
சென்னை, ஏப். 14: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஜாக் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் புதிய கேபிள் டி.வி. நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதை மு.க.அழகிரி சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
ஜாக் கம்யூனிகேஷன்ஸ் கேபிள் நிறுவனம், கடந்த 7 ஆண்டுகளாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கேபிள் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் இணைந்து சென்னையை மையமாக வைத்து இப் புதிய கேபிள் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் உரிமத்தினை முறையாகப் பெற்றுள்ள இந்த கேபிள் நிறுவனம், சென்னையில் விரைவில் தங்களது வர்த்தக ஒளிபரப்பு சேவையைத் தொடங்கவுள்ளது. தயாநிதி அழகிரியும் ஜேக் கம்யூனிகேஷன்ûஸ சேர்ந்த ஜெயராமன் கமலேஷும் இப் புதிய கேபிள் நிறுவனத்தின் இயக்குநர்களாகச் செயல்படுவார்கள்.
சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இந்த எம்.எஸ்.ஓ. (ஙன்ப்ற்ண் நஹ்ள்ற்ங்ம் ஞல்ங்ழ்ஹற்ர்ழ்), பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளின் சிக்னல்களை ஒருங்கிணைத்து கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்கும். அவற்றை ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.
ஜாக் கம்யூனிகேஷன்ஸ் கேபிள் டி.வி. நிறுவனத்தின் சிறப்பம்சம், எஸ்சிவி கேபிள் நிறுவனத்துக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகளுக்கு தயாநிதி அழகிரி, ஜெயராமன் கமலேஷ் அளித்த பதில்:
மிகக் குறைந்த விலையில் ஏராளமான சேனல்களைத் தரமாக ஒளிபரப்பவுள்ளோம். வாடிக்கையாளருக்குப் பயனளிக்கக்கூடிய மதிப்புக் கூட்டுச் சேவைகளைக் குறைந்தக் கட்டணத்தில் வழங்குகிறோம். இதுமட்டுமின்றி தேவைக்கேற்ற சேனல்கள், ஜோதிடம், ஷாப்பிங், ஆன்லைன் டிக்கெட்டிங், இ-மெயில் உள்ளிட்ட பல சேவைகளை முதல்முறையாக சென்னை நகர கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.
சென்னையில் குறைந்தது 20 லட்சம் இணைப்புகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் எம்.எஸ்.ஓ. வில் 84 அனலாக் மற்றும் 144 டிஜிட்டல் உள்பட 250}க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன.
எஸ்சிவி நிறுவனத்துக்குப் போட்டியாக இந்த கேபிள் நிறுவனத்தைத் தொடங்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே சென்னையில் செயல்பட்டு வந்தாலும் நாங்கள் குறைந்த விலை, சிறந்த தொழில்நுட்பம், அன்பான வாடிக்கையாளர் சேவை போன்றவற்றின் மூலம் எங்களை நிலைநிறுத்திக் கொள்வோம் என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் காந்தி அழகிரி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தமிழரசி, எம்.எல்.ஏக்கள் ப.ரங்கநாதன், மாலைராஜா உள்ளிட்டோரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான திமுக பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
Good! Destroy Monopoly
ReplyDelete