Madharasapattinam - Chennai before independence

http://www.kollywoodtoday.com/wp-content/uploads/2009/03/madraspattinam-mar9-2009.jpg
‘மதராச பட்டினம்’ படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னையை காண்பித்துள்ளோம் என்றார் இயக்குனர் விஜய். ‘கிரீடம்’, ‘பொய் சொல்லப் போறோம்’ படங்களை அடுத்து விஜய் இயக்கும் படம் ‘மதராச பட்டினம்’. படம் பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 1945&ம் ஆண்டிலிருந்து 1947&ம் ஆண்டு வரையிலான கதையாக உருவாகிறது இது. சலவை தொழிலாளியாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் நடிக்கிறார்.

அந்த காலத்து சென்னை எப்படி இருந்தது என்பதை, பழைய சென்ட்ரல் மற்றும் மவுண்ட்ரோடு ஆகியவற்றை அரங்குகள் மூலம் தத்ரூபமாக அமைத்திருக்கிறார் வி.செல்வகுமார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் நா.முத்துக்குமார் பாடல்களை எழுதி உள்ளார். மும்பையை சேர்ந்த மனோகர் வர்மா மல்யுத்த பயிற்சி அளித்துள்ளார். இவ்வாறு விஜய் கூறினார்.

Comments

Most Recent