நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... மும்பையில ஐபிஎல் அணிகள் கலந்துகிட்ட நைட் பார்ட்டியில மேகன நடிகை, ஆஸி வீரரோடு டான்ஸ் ஆட...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
மும்பையில ஐபிஎல் அணிகள் கலந்துகிட்ட நைட் பார்ட்டியில மேகன நடிகை, ஆஸி வீரரோடு டான்ஸ் ஆடினாரு. அதே நேரம், மும்பை வீரர் ஒருத்தரோடு நீண்ட நேரம் சிரிச்சி, சிரிச்சி பேசிட்டிருந்தாராம்... பேசிட்டிருந்தாராம்... உற்சாக பானம்
குடிச்சிட்டு, அந்த வீரரோடு டான்சும் ஆடிட்டு போனாராம்... போனாராம்... நடிகையோட புது லவ¢வரு அவருதான்னு கோடம்பாக்கம் பட்சி சொல்லுது... சொல்லுது...
பிய நடிகை ரெண்டு படங்கள்ல நடிக்கிறாரு. தமிழ் வசனங்களை உச்சரிக்க ரொம்பவே கஷ்டப்படுறாராம்...
கஷ்டப்படுறாராம்... பல நேரங்கள்ல வசனமே பேச முடியாம
கேமராவை பார்த்துட்டே நிற்கிறாராம்... நிற்கிறாராம்... இதனால நிறைய டேக் வாங்கியிருக்காரு... வாங்கியிருக்காரு... நடிகையோட காட்சி வந்தாலே இதை எப்போ படமாக்கி முடிக்கிறதுன்னு யூனிட்டே புலம்புதாம்... புலம்புதாம்...
ஒரிஜினல் பட ரிசல்ட் தந்த ஷாக்லேருந்து இயக்குனர் மீளலையாம்... மீளலையாம்... போன் நம்பரை மாத்திட்டு, யார் கூடவும் பேச மறுக்கிறாராம்... மறுக்கிறாராம்... அடுத்த படத்துல ஜெயிச்சிட்டுதான் பேசுவேன்னு சொல்றாராம். தெலுங்கு பக்கம் போகவும் ஐடியா வச்சிருக்காராம்... வச்சிருக்காராம்...
Comments
Post a Comment