கோடம்பாக்கம் கோடங்கி நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... சென்னை நகரின் மைய பகுதியில் பிரகாசமான நடிகரு பிரமாண்ட பங்களா கட்...
கோடம்பாக்கம் கோடங்கி
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
சென்னை நகரின் மைய பகுதியில் பிரகாசமான நடிகரு பிரமாண்ட பங்களா கட்டிக்கிட்டிருக்காரு... கட்டிக்கிட்டிருக்காரு... சென்னை நகரின் லேண்ட்மார்க்குகளில் ஒண்ணா அது இருக்கணும்னு நடிகை மனைவி ஆசைப்படுறாராம்.... ஆசைப்படுறாராம்... இதனால ரெண்டு வருஷத்துக்கு பிறகு நடிக்கப்போற படத்துக்கு கூட அட்வான்ஸ் வாங்கி வீட்டை அழகுபடுத்துறாராம்... நடிகரு அழகுபடுத்துறாராம்...
பிரபலமான விளம்பரத்துல நடிக்க ஜெனி நடிகையை செலக்ட் பண்ணினதுக்கு மாதவ நடிகருதான் காரணமாம்... காரணமாம்... விளம்பரத்துல வர்ற மாதிரியே ரெண்டு பேரும் ரொம்பவே நெருக்கமா இருக்காங்களாம்... இருக்காங்களாம்... இவங்க உறவால மனைவிகுலம் அப்செட்ல இருக்காராம்... அப்செட்ல இருக்காராம்...
கல்யாணத்துக்கு முதல்நாள் அம்மாவுக்கு கைது வாரன்ட் வர, ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தாராம்... புதுப்பொண்ணு அழுதுகிட்டே இருந்தாராம்... ‘நாங்க கோடீஸ்வர குடும்பம். சொற்ப பணத்தை செட்டில் பண்ணாம அசிங்கப்படுறீங்களே’னு மாப்பிள்ளை வீட்டார் கொதிக்க, ஆடிப்போயிட்டாராம்... நடிகை ஆடிப்போயிட்டாராம்... சென்னைலயிருந்து பெரிய காக்கி அதிகாரி ஒருத்தரு கைதெல்லாம் நடக்காதுனு சொன்ன பிறகுதான் இந்திரலோகத்து நாட்டியக்கார நடிகை முகத்துல கல்யாண களை வந்துச்சாம்... வந்துச்சாம்...
Comments
Post a Comment