நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... கரகாட்ட நடிகரு நடிச்ச படம் பல வருஷமா கொஞ்சம் கொஞ்சமா எடுத்தாங்க... எடுத்தாங்க... ஒரு வழ...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
கரகாட்ட நடிகரு நடிச்ச படம் பல வருஷமா கொஞ்சம் கொஞ்சமா எடுத்தாங்க... எடுத்தாங்க... ஒரு வழியா படத்தை முடிச்சிட்டாங்களாம். ஆனாலும் படத்தை வாங்க ஆள் கிடைக்கலையாம்... கிடைக்கலையாம்... படத்துல ரெண்டு கிளாமர் பாடலை சேர்த்துவிடுங்கன்னு வினியோகஸ்தருங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்... அதுக்கு பைனான்ஸ் பிடிக்க தயாரிப்பு அலைஞ்சிட்டிருக்காராம்... அலைஞ்சிட்டிருக்காராம்...
பிரியமான பெல் நடிகை பாலிவுட்டுக்குன்னு கிளாமரா போட்டோ ஷூட் நடத்தியிருக்காராம்... நடத்தியிருக்காராம்... மணியான இயக்குனர், வர்மா இயக்குனருன்னு ரெண்டு பேரோட இந்தி படங்கள்ல நடிகை நடிக்கிறாரு. ரெண்டு படத்துலயும் ஹோம்லி கேரக்டராம்... கேரக்டராம்... அதனால இந்தில சோலோ ஹீரோயினா சான்ஸ் பிடிக்கத்தான் இந்த போட்டோ ஷூட் நடத்தினாராம்... நடத்தினாராம்...
டேனியான வில்லன் நடிகரு திரும்ப ஹீரோவா நடிக்க இருந்தாரு. ஆனா பைனான்ஸ் பிரச்னையால படம் ஆரம்பம் ஆகல. வில்லன் கேரக்டருக்கும் வாய்ப்பு வரல... திடீர்னு நடிகருக்கு டைரக்ஷன் மேல ஆச வந்திருக்காம்... வந்திருக்காம்... அறிமுகப்படுத்தின கவுதம இயக்குனர்கிட்ட உதவிக்கு சேர கேட்டிருக்காராம்... கேட்டிருக்காராம்... இயக்குனர் இன்னும் பதில் சொல்லலியாம்... சொல்லலியாம்...
Comments
Post a Comment