Kollywood Kisu Kisu - மாறிய நடிகை சுத்தும் இயக்குனர்



கோடம்பாக்கம் கோடங்கி

http://cinema.dinakaran.com/cinema/gallery/news-in-cinema-97.jpg
இன்ஷியல் நடிகரை வச்சு படம் இயக்குறவரு கடுப்புல இருக்கிறாராம். படத்துல ஹீரோயினா நடிக்கிற மும்பை நடிகைய இயக்குனரு சுத்தி, சுத்தி வர்றாராம்... வர்றாராம்... நடிகையோ பாராமுகமாவே இருக்கிறாராம்... இருக்கிறாராம்... கடுப்பானவரு, பல டேக் எடுத்து நடிகைக்கு டார்ச்சர் தர்றாராம்... தர்றாராம்...

'ஹீரோ, ஹீரோயின் அது'ங்கிற படத்துல அலைபாயுற நடிகரு நடிச்சாரு. படத்துல நடிகரும் சாதா நடிகையும் நடிக்க வேண்டிய ஒரு சில
காட்சி மட்டும் பாக்கியாம்... பாக்கியாம்... முழு சம்பளமும் கிடைச்ச சந்தோஷத்துல, அந்த காட்சிகள்ல நடிக்க நடிகை தயாரா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... ஆனா நடிகருக்கு சம்பளம் கிடைக்கலயாம். பாக்கி சம்பளமும் செட்டில் பண்ணினாத்தான் நடிப்பேன்னு நடிகரு சொல்றாராம். ஏற்கனவே இந்த பஞ்சாயத்து சங்கத்துக்கு போச்சு. இப்போ திரும்ப, நடிகர்கிட்ட தயாரிப்பு கம்பெனி சமாதானமா போக பேசுதாம்... பேசுதாம்... ஆனா நடிகர் இதுக்கு ஒத்துக்க மறுக்கிறாராம்... மறுக்கிறாராம்...

ராமாயணத்தை எழுதினவரு பேர்ல படம் இயக்கியவருக்கும் அதுல செகண்ட் ஹீரோயினா நடிச்சவருக்கும் லவ்வு பத்திக்கிட்டு எரிஞ்சதாம்... எரிஞ்சதாம்... ஆனா இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்கல. அதனால ஹீரோயின் இயக்குனருக்கு
டாடா காட்டிட்டாராம்... காட்டிட்டாராம்... இப்போ புது நண்பரோடு சுத்துறாராம்... சுத்துறாராம்...

Comments

Most Recent