தமிழில் படம் இயக்க வந்த வாய்ப்பை தரணி மறுத்துள்ளார். தெலுங்கில் படம் இயக்குவதால் தமிழில் வந்த வாய்ப்பை மறுத்ததாக அவருக்கு நெருக்கமானவர்...
தமிழில் படம் இயக்க வந்த வாய்ப்பை தரணி மறுத்துள்ளார். தெலுங்கில் படம் இயக்குவதால் தமிழில் வந்த வாய்ப்பை மறுத்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
இந்தியில் வெற்றிபெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் வாங்கியுள்ளது. தமிழ் ரீமேக்கை இயக்க அவர்கள் முதலில் அணுகியது தரணியை என்கிறார்கள். தெலுங்கில் படம் இயக்குவதால் இந்த வாய்ப்பை தரணி ஏற்கவில்லை.
வரும் 30ஆம் தேதி தரணி இயக்கும் தெலுங்குப் படம் தொடங்குகிறது. இதற்காக பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாதீரா வெற்றி ஜோடி ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் தரணி இயக்கும் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். அதனால் படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
தரணி தெலுங்கில் பங்காரம் என்ற படத்தை பவன் கல்யாணை வைத்து இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment