Ajith's training in Spain | ஸ்பானியாவில் பயிற்சி பெறும் அஜித் !

நடிகர் அஜீத் தனது பிறந்த நாளான (மே1) நாளை தமிழகத்தில் இல்லை என்பதனால் தனது ரசிகர்கள் வாழ்த்துத்  தெரிவிப்பதற்காக  விட்டிற்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுள்ளார்.
' பார்மூலா - 2 ' கார் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளுக்காகத் தற்போது ஸ்பானியாவில் இருக்கிறார் நடிகர் அஜீத்.

அங்கிருந்தவாறு அவர் தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில்,  தனது பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவிக்கும் விரும்பும் ரசிகர்கள் வீட்டிற்கு வந்து ஏமாற்றம் அடையக் கூடாதென்றும்,
அந்நாளில் நற்பணிகள், உதவிப் பணிகளில் ஈடுபடுவதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
அன்மைக்காலத்தில் அஜீத் கார் ஓட்டப் பந்தயங்களில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

Comments

Most Recent